Friday, June 5, 2020

மையச் செயலகம் (CPU Central Processing Unit )



இது கணினியில்  மிக முக்கிய  பகுதியாகும்  மனிதனின் மூளையை  போன்று இது கணினியில் தொழில்படுகிறது. கணினியில் உடசெலுத்தப்படும் கட்டளைகளைப் புரிந்து  கொண்டு அவற்றிக்கேற்ப  செயற்பாடுகளை  இயக்குகின்ற பகுதியாக தொழிற்பாடுகிறது 
கணினியின்  இயங்கும் வன்பொருள் மற்றும் மென்பொருளிலிருந்து பெறும் அனைத்து வழிமுறைகளையும் கணினியின் CPU கையாளுகிறது.
CPU வரலாறு
1970 களின் முற்பகுதியில்  டெட் ஹாஃப் ( Ted Hoff ) மற்றும் பிறரின் உதவியுடன் இன்டெல்லில் (Intel)  CPU முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இன்டெல் வெளியிட்ட முதல் செயலி 4004 செயலி, படத்தில் காட்டப்பட்டுள்ளது

CPU இன் கூறுகள்
CPU இல், இரண்டு முதன்மை கூறுகள் உள்ளன.
ALU (எண்கணித தர்க்க அலகு) - கணித, தருக்க மற்றும் முடிவு செயல்பாடுகளை செய்கிறது.
CU (கட்டுப்பாட்டுத்  தொகுதி ) - அனைத்து செயலிகளின் செயல்பாடுகளையும் இயக்குகிறது

Arithmetic and Logical Unit (ALU)
இங்கு அனைத்து கணிப்பிடுகளும் (கணித ரீதியிலான  கூட்டல் ,கழித்தல், வகுத்தல்,பெருக்கல் போன்ற செயற்பாடுகளுக்கும் )  மற்றும்  சகல ஒப்பிடுகளும் செய்யப்படுகின்றன. (Logic Functions)
கட்டுப்பாடு தொகுதி  (Control Unit)
நினைவகத்திலிருந்து  பெறும் ஆவணங்களை விளக்குவதில் மற்றும் ஆவணங்களைச் செயற்படுத்துவதற்கு தேவையான ஒழுங்குகளை  அல்லது  தொடர்ச்சியான நிகழ்வுகளை நெறிப்படுள்ள போன்றவற்றை இத் தொகுதி செய்கின்றது 

CPU  உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்  பின்வருமாறு  
  1. AMD
  2. Apple
  3. ARM Holdings
  4. ASRock
  5. Centaur Technology
  6. Gumstix
  7. Intel
  8. Microsemi
  9. VIA


0 comments:

Post a Comment